Skip to main content

பெற்றோர்களுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் !

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு  டிவிட்டர் வாயிலாக கருத்து தெரிவித்த நடிகர் "விவேக்" பள்ளி மாணவர்களுக்கு "ஸ்மார்ட் போனை" பெற்றோர்கள் வாங்கி தர வேண்டாம் என்றும் ,  "சாதாரண போன்" பள்ளி மாணவர்களுக்கு போதும் என்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் . நடிகர் விவேக் அவர்களின் கருத்தை அனைவரும் வரவேற்றுள்ளனர். உலகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர வளர அதனுடன் தீய செயல்களும் வளர்ந்து வருகிறது சமீப காலமாக என்றால் மிகையாகாது. இன்றைய சமுதாயத்தில் மாணவர்கள் " Android Mobile" யை பயன்படுத்துவது. அவர்களின் பாதையை திசை திருப்புவதாக அமையும். 

vivek twitter

எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு தொலைபேசி வழங்குவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்களுக்கு ஒத்துழைத்து மாணவர்களும் தொலைபேசியை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பது ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்தாக உள்ளது. தொலைபேசியை மாணவர்கள் தவிர்ப்பதன் மூலம் கல்வியில் திறம்பட சாதிக்க முடியும். மேலும் சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது எவராலும் மறுக்க முடியாதது.
 


பி.சந்தோஷ் ,சேலம்.

சார்ந்த செய்திகள்