Skip to main content

ஆசிரியர் பகவான் மீது பொய் புகாரா?

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

கடந்த வருடம் அரசு ஆசிரியர் பகவானுக்கு  பணியிட மாற்றம் வழங்கிய போது அந்த பள்ளியின் மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு அழுது  அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.அரசும் அந்த கோரிக்கையை ஏற்று அவரை அதே பள்ளியில் மீண்டும் பணியில் அமர்த்தியது அந்த நிகழ்வு அணைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளி வந்தது. இந்த நிலையில் ஆசிரியர் பகவான் மீது புகார் ஒன்று வந்துள்ளது அதை அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளிகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான்.

 

teacher



இந்த நிலையில் சமீபத்தில்,  ஜூன் 18 ஆம் தேதி சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன்   பகவானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . மேலும் ஆசிரியர் பகவான்  , திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர்  புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர் பகவானையும், புகார் அளித்த பெண்ணையும் போலீசார் அழைத்து 5 மணி நேரம் விசாரித்து வந்துள்ளனர். அப்போது ஆசிரியர் பகவான், புகார் கொடுத்த பெண்ணை டி.என்.ஏ, பரிசோதனைக்கு அழைத்த‌தாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண், கால அவகாசம் கோரியதால், காவலர்கள் அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்து அனுப்பியுள்ளனர். இதனால், அந்த பெண் பொய் புகார் கொடுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்