Published on 27/07/2019 | Edited on 27/07/2019
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழக துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, , கழக துணை செயலாளர் ஏ.எஸ்.அக்பர், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக அணி நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
