Published on 14/07/2021 | Edited on 14/07/2021

கோவை வைதேகி நீர்வீழ்ச்சி அருகே நேற்று இரவு நடமாடிய காட்டு யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினருடன் கோவை குற்றாலம் சுற்றுலா வேன் ஓட்டுநர் விஜயகுமாரும் அங்கு சென்றிருந்தார். அப்போது வைதேகி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள நுழைவு வாயிலில் விஜயகுமார் நின்றிருந்த போது, காட்டு யானை திடீரென அங்கு வந்துள்ளது.
இதையறிந்து சுதாரிக்கும் முன்பு விஜயகுமாரை காட்டு யானை தந்தத்தால் தாக்கி, தூக்கி வீசியது. இதில் இரு கால்கள், முதுகு பகுதிகளில் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகே இருந்த வனத்துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.