Published on 06/12/2019 | Edited on 06/12/2019
தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து புதிதாத உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களை மறுவரைறை செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தி்ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக உட்பட 12 தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்றும், விடுபட்ட 9 மாவட்டங்களை 4 மாதங்களில் மறுவரையறை செய்து தேர்தலை நடத்தவேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளது.