தேவை என்றால் நடிகர் விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டியளித்துள்ளார்.
நேற்று நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை அழைத்துவரப்பட்ட நடிகர் விஜயை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விஜயின் இல்லத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிகில் படத்திற்காக பெற்ற சம்பளம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமானவரித்துறை வாக்குமூலம் பெற்றதாகவும், பிகில் படத்தில் நடிப்பதற்கு விஜய் 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும், விஜயின் சொத்து விபரங்கள் குறித்தும் வருமானவரித் துறையினர் ஆய்வு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்து அழைப்பு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சரி இல்லை என்றால் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து விஜய் வழக்கு தொடரலாம். ஒன்றும் இல்லை என்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி சென்னையில் பேட்டியளித்துள்ளார்.