Skip to main content

சசிகலாவின் அக்கா மகன் இன்று புதுக்கட்சி துவங்கமுடியாமல் போனது ஏன்?

Published on 30/08/2018 | Edited on 30/08/2018
ப்

 

சசிகலா குடும்பத்தில் இருந்து இன்னும் எத்தனைப்பேர் கட்சி தொடங்குவார்கள் என தெரியவில்லை. தினகரன், திவாகரனை தொடர்ந்து சசிகலாவின் அக்கா மகன் பாஸ் என்கிற பாஸ்கரனும் கட்சி தொடங்க முயன்றபோது தடைப்போட்டுள்ளது போலீஸ்.

 

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த  ஞானமங்கலம் கண்டிகை பகுதியில் டிடிவி.தினகரன் சகோதரர் பாஸ்கரன் இன்று ஆகஸ்ட் 30 ந்தேதி புதிய கட்சி துவக்கி, கட்சியின் பெயர், கொடி அறிமுகம் செய்து 1000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய பிரம்மாண்டமான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


இன்று ஆகஸ்ட் காலை கூட்டம் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன் அறிவிப்பின்றி நடத்தப்படும் கூட்டத்திற்கு அனுமதியில்லை என்று வேலூர் மாவட்ட காவல்துறை தடை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.


போலிஸ் தரப்பில் விசாரித்தபோது, விழா நடத்தப்படும் இடம் வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்டது. பாஸ்கரன் ஆட்கள் அது திருவள்ளுர் மாவட்டத்துக்கு உட்பட்ட இடமென அந்த மாவட்ட போலிஸாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தந்ததாக தெரிகிறது. அவர்கள் 4 நாட்களுக்கு முன்பு இது வேலூர் மாவட்டம் என கடிதத்தை திருப்பி தந்துள்ளனர். அதை வாங்கிக்கொண்டு எங்களிடம் வந்தார்கள். விழாவுக்கு நாலு நாள் இருக்கும்போது அனுமதி தர முடியாதுன்னு சொன்னோம். அவுஙக கோர்ட்டுக்கு போனாங்க. அனுமதிதர 7 நாள் டைம் வேணும் அதான் விதின்னு சொல்லிட்டோம். அதனால் விழாவை ரத்து செய்திருப்பார்கள் என்கிறார்கள். 

                                                                                                                                                                                                                                                                                                                              

ஆளும் கட்சி சதியால் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டும்  கூட்டத்தை நடத்த முடியவில்லை என்று பாஸ்கரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்