Skip to main content

ரஜினியிடம் கேட்ட கேள்வியை சரத்குமாரிடம் ஏன் கேட்கவில்லை? இளைஞரின் விளக்கம்

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

 

ra sa


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.  அப்போது மருத்துவனையில் போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ் என்ற இளைஞர் தங்களை பார்க்க வந்த ரஜினிகாந்தை பார்த்து ''யார் நீங்கள்?'' எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாக பேசப்பட்டது. 

 

sara

 

இந்நிலையில் இன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் இளைஞர் சந்தோஷ், சரத்குமாரைப்பார்த்து நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பவில்லை.  இது குறித்து சந்தோஷ்குமாரே செய்தியாளர்களை பார்த்து,  ‘’நேற்று ரஜினியை பார்த்து யார் நீங்கள் என்று கேட்ட நான் இன்று சரத்குமார் சாரைப்பார்த்து ஏன் அப்படி கேட்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

 

sa ku

 

எங்களுடைய 100 நாள் போராட்டத்தில் ஒரு நாள் பங்கெடுத்துக்கொண்டார்.  அதுமட்டுமல்லாமல் நாங்கள் குடித்துக்கொண்டிருக்கும் மிகவும் மோசமான அந்த தண்ணீரையே குடித்த மனிதர் அவர்.  அதனால்தான் அவரை நீங்கள் யார் என்று கேட்கவில்லை’’ என்று தெரிவித்தார். 

 

sa ku

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

விருதுநகர் தொகுதியில் ராதிகாவுடன் பைக் சவாரி! சின்ராசாக மாறிய சரத்குமார்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பிரச்சார அனல் கடுமையாக வீசுகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரச்சார வாகனத்தில் நின்றவாறு மைக் பிடித்து ஆதரவு கேட்கும் வழக்கமான நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்ட வேட்பாளராகத் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

ராதிகா செல்லுமிடமெல்லாம் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. சூர்யவம்சம் சின்ராசு என்று பிரச்சாரத்தில் தன் கணவர் சரத்குமாரைப் பெருமிதமாகச் சொல்லிவந்தார். சூர்யவம்சம் சினிமாவில் சின்ராசு, தன்னுடைய காதலியை பைக்கில் அழைத்துச் செல்வார். இந்தத் தேர்தல் களத்தில் நிஜத்திலும்,  தன் மனைவி ராதிகாவை பைக்கிலேயே  பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

திரையுலக நட்சத்திரங்களாக இருந்தும், சாதாரண மனிதர்களைப்போல், பொதுவெளியில் ராதிகாவும் சரத்குமாரும் டூ வீலரில்  செல்வது, விருதுநகர் தொகுதி வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.