தெற்கு ரயில்வேக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய 3 மெமு ரயில்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஐசிஎப் செயலாளர் கே.என். பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
ஐசிஎப் தொழிற்சாலையில் நவீன வசதிகள்கொண்ட மெமு ரயில்கள் புதிய வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் நவீன கழிப்பறை, சிசிடிவி, ஜிபிஎஸ் தொழில்நுட்பம் போன்றவை உள்ளன. விரைவாக செல்வதற்காக ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கட்டுமானத்துடன், மும்முனை மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதில் 2,402 பயணிகள் வரை பயணிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் குஷன் இருக்கைகள், அலுமினியம் ஸ்டைலீங் கதவுகள், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் எல்.ஈ.டி. விளக்குகள், ஜி.பி.எஸ்.ல் இயங்கும் பயணிகளுக்கான அறிவிப்புகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த நிதியாண்டில் மொத்தம் 9 ரயில்கள் கட்டமைக்க இருப்பதாகவும், அதில் 3 தெற்கு ரயில்வேக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.