யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் செயல் விளக்கம் மற்றும் மாதிரி வாக்கு பதிவு நிகழ்ச்சி சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கலந்துகொண்டு செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாதிரி வாக்கு பதிவு நடத்தி வாக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது.

வாக்கு இயந்திரத்தில் வாக்கு செலுத்தப்பட்ட பின் அந்த ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் 7 வினாடிகள் தெரியும். பின்னர் அந்த சீட்டு அந்த இயந்திரத்தினுள்ளேயே விழுந்துவிடும். இப்படி சேகரிக்கப்படும் வாக்கு ஒப்புகை சீட்டுகள் வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் வித்தியாசங்கள் இருப்பதாக புகார் எழுந்தால் எண்ணப்படும்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் கார்த்திகேயனும் கலந்துகொண்டார்.