திருச்சி முக்கொம்பு அணை கட்டுமான பணிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியபொழுது, புதிய அணையின் கட்டுமான பணி இதுவரை 35 சதவிகிதம் முடிந்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரிக்குள் இந்த அணை கட்டுமானப்பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.டெல்லி வன்முறை பற்றி தெரியவில்லை ஊடகத்தை பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிகிறது நாம தமிழகத்தைத்தான் பாக்கனும் என்றார்.
தேமுதிக பிரேமலதா மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,
எல்லோருக்கும் பதவி கேட்க உரிமை உண்டு ஆனால் தலைமை கழகம் கூடிதான் யாருக்கு பதவி என முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
இன்று காலை திருமணவிழா ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தையின் பொழுதே இதுபற்றி பேசப்பட்டிருக்கிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை முதல்வர் தருவார் என நம்புகிறோம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.