Published on 30/01/2021 | Edited on 30/01/2021
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை அடைந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் எப்பொழுது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்து இன்று (30.01.2021) விக்ட்டோரியா மருத்துவமனை முடிவெடுக்க உள்ளது. சசிகலாவுக்கு கரோனா அறிகுறிகள் இல்லாமல் அவர் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்து முடிவுகள் வந்தபிறகு, சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.