இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி சாரா நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை ஒன்றிணைந்து நிதி சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளங்களில் ஒன்றை உருவாக்குவதற்கும் இறுதிக்கட்ட வழங்கலை மாற்றி அமைப்பதற்கும் ஓர் உத்தி சார்ந்த பங்காண்மையை அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் 370 மில்லியன் மிகவும் ஈடுபாடு கொண்ட வாடிக்கையாளர் தளம், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வலிமையான வழங்கல் வலையமைப்பு, பஜாஜ் ஃபைனான்ஸின் 27 தயாரிப்பு வகைகளின் பல வகைப்பட்டதொகுப்பு, 5,000+ கிளைகள் மற்றும் 70,000 கள முகவர்கள் கொண்ட வழங்கல் தொகுதி ஆகிய அனைத்தையும் இந்தத் தனித்துவமான பங்காண்மை ஒன்றிணைக்கிறது.
முதலில் பஜாஜ் ஃபைனான்ஸின் ரீட்டைல் நிதி தயாரிப்புகளை ஏர்டெல் தன் தேங்க்ஸ் செயலியில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான வாடிக்கையாளர் அனுபவத்திற்காக வழங்கும். அதன் பின்னர் அதன் நாடு தழுவிய ஸ்டோர் நெட்வொர்க் மூலம் வழங்கும். ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய இந்த நிறுவனங்களின் டிஜிட்டல் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த வலிமை நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வளர்ச்சியை கணிசமான அளவில் உயர்த்த உதவும்.