அரவக்குறிச்சி இடைத்தேர்தல் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி,
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் உள்ள 250 வாக்குசாவடிக்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கீழ் அதிகாரிகள் வரை சென்று எங்கள் கட்சியினர் வாக்குசாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வைத்துள்ள சொந்த பட்டாயிடத்தில் அமர்ந்து கட்சி வேலை செய்வதை அனுமதிக்கவில்லை. களப்பணியாளர்களை தேர்தல் வேலை நடத்த விடாமல் தடுக்கிறார்கள்.
இதற்கு உயர் அதிகாரிகள் முதல் அனைவரும் துணை நிற்கிறார்கள். நான் இது குறித்து திருச்சி டிஜஜி லலிதா விடம் புகார் செய்தோம். அவர்கள் சொன்ன விதிமுறையிலே வேட்பாளர் புகைப்படமும், அத்தோடு சின்னம் மட்டும் இடம் பெற வேண்டும் என்று இருக்கிறது. நாங்கள் அப்படி தான் வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் ஆளும்கட்சியின் தலைவர்கள் படம் போட்டு தேர்தல் விதிமுறையை மீறி நடக்கிறார்கள்.
இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் புகார் செய்தேன். ஆனால் அவர்களோ நாங்களும் சொல்ல தான் முடியும் நாங்க என்ன பண்ண முடியும் என்று கைவிரிக்கிறார்கள். போலிஸ் முழுமையாக அரவக்குறிச்சி கையில் எடுத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள்., மனிதாபிமானே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். நாங்கள் சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்படும் என்பதால் அமைதியாக இருக்கிறோம். இருந்தாலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றார்.