Skip to main content

‘கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம்’- சிதம்பரம் நேருநகர் பொதுமக்கள் கொந்தளிப்பு!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

We will engage in the immigration struggle in the office

 

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 33-வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகர், நேரு நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளை  வரும் 26-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு நேருநகரில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்து உள்ளிட்ட அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், இந்த இடத்தை அரசு அப்புறப்படுத்திக் கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த இடத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம்.

 

இந்த பகுதியில் உள்ள அனைவரும் மிகவும் நலிவுற்ற கூலித்தொழிலாளர்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு இந்த இடத்தை அப்புறப்படுத்த வேண்டும்.  எனவே மாற்று இடம் கேட்டு திங்கள்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்