தனியார் நிறுவனத்திடம் தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை முழுமையாக கொடுக்கவில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தீவிரவாதிகள், நக்சல்கள் ஊடுருவல் இருந்தால் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்.
24 மணி நேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த 2008ல் திமுக ஆட்சியில் ஆரம்பிக்கபட்ட திட்டம். ஆனால் அவர்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. 24 மணி நேரம் தண்ணீர் கொடுப்பது சிறப்பான திட்டம் என்பதால் அதிமுக அரசு அதனை செயல்படுத்துகின்றது.
சூயஸ் நிறுவனத்திடம் கோவை மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை முழுமையாக கொடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம்தான் முழு கட்டுப்பாடும் உள்ளது . போதுமான தண்ணீர் நம்மிடையே இருக்கின்றது. அதை விநியோகம் செய்வதில்தான் சிக்கல் இருக்கின்றது.