தூத்துக்குடியில் மொத்தம் 14 லட்சம் வாக்காளர்களே உள்ள நிலையில் தூத்துக்குடி அமமுக வேட்பாளர் ஒன்றரை கோடி வாக்குகள் வியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறியது கேலிக்குரியதாக இருந்தது.
தூத்துகுடியில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசையும் போட்டியிடுகின்ற நிலையில் அமமுக வேட்பாளர் புவனேஷ்வரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மக்களையெல்லாம் சந்தித்துவிட்டு வந்தபிறகு என்னுடைய கணிப்புப்படி, எங்கள் கழக துணை பொதுச்செயலாளர்( டிடிவி) கணிப்புப்படி சுமார் ஒன்றரை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை தோற்கடிப்பேன் என கூறினார். அதற்கு தொண்டர்களும் ஆரவாரத்துடன் கைதட்டி முடித்தனர். அதன் பின் அவர் அருகில் அமர்ந்திருந்த நிர்வாகி ஒருவர் இருப்பதே 14 லட்சம் வாக்காளர்கள் தான் அண்ணே எனக் கூற, மன்னித்து விடுங்கள் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என கூறினார்.