Skip to main content

சடலத்தின் மேல் சடலத்தைப் புதைக்கும் அவலம்... சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தர்ணா!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

viruthachalam incident


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

 

இக்கிராமத்தில், இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக, மணிமுத்தாறின் அருகில் 4 1/2 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு இருந்துள்ளது. ஆனால், சுடுகாட்டை சிலர் முற்றிலுமாக ஆக்கிரமிப்புச் செய்துள்ளதால், இறந்தவர்களின் உடலை மணிமுத்தாறு நதிக்கரையில் சடலத்தின் மேல் சடலம் புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சில நேரங்களில் இறந்தவர் உடலைப் புதைப்பதற்குக் கூட இடமில்லை என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும், புகார் மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அக்கிராம மக்கள், மயானத்தில் அமர்ந்து, கண்டன முழக்கங்கள் எழுப்பி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களின் கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுடுகாட்டை மீட்டுத் தராவிட்டால், அடுத்தகட்டமாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.


 

 

சார்ந்த செய்திகள்