Skip to main content

98 சதவீதம் வாக்கு எண்ணும் பணி நிறைவு - தேர்தல் ஆணையம் தகவல்

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

98 percent counting of votes completed - Election Commission information

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாகக் கடந்த வாரம் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (12.10.2021) காலைமுதல் எண்ணப்பட்டுவருகிறது.

 

இன்று காலை 11.30 மணி நிலவரப்படி, 140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக இரு இடங்களிலும் முன்னணியில் உள்ளது. 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 1,003 இடங்களிலும், அதிமுக 211 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. பாமக 42 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 87 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 98 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் பிற்பகல் 2 மணிக்கு முழுமையாக வெளியாக வாய்ப்பிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

udanpirape

 

சார்ந்த செய்திகள்