தளவானூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், தளவானூர்- எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்பாராத விதமான தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இந்த தகவலையறிந்து அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், தடுப்பணையிலுள்ள மூன்று கதவுகளில் ஒன்று முழுவதும் சேதமான நிலையில், மற்ற இரண்டு கதவுகளிலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, தடுப்பணை உடைந்த இடத்தில் மண் தடுப்பு ஏற்படுத்தி, சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
தடுப்பணை உடைந்து தேங்கிய தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.