விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தாம் பொறுப்பேற்றது முதல் சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் வகையில் பொது மக்கள் தனது தொலைபேசிக்கு எந்நேரமும் தொடர்பு கொண்டு பேசலாம் என அறிவித்துள்ளார்.அவ்வாறு வரும் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள அகரம் சித்தாமூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர், "ஊரடங்கால் தமது குடும்பம் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாகவும், சாப்பிட்டு 3 நாட்கள் ஆகிவிட்டதால் தங்களுக்கு உதவிடுமாறும்" உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்து, எஸ்.பியின் செல்போனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.இதையடுத்து சித்தாமூருக்கு நேரில் சென்ற எஸ்.பி.ஜெயக்குமார், உதவி கேட்ட குடும்பத்தினருக்குத் தனது சொந்த பணத்தில் ஒரு மாதத்திற்கான மளிகைச் சாமான்கள், காய்கறி வாங்கிக் கொடுத்ததோடு, செலவுக்குப் பணமும் கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், இந்த ஜெகத்தினை அழித்திடு" என்றான் புரட்சிக்கவி பாரதி..அந்த மண்ணில் பிறந்த ஜெயக்குமாருக்கு உதவும் எண்ணமும்,பற்றும் இருப்பது நியாயம் தான்.!