விழுப்புரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டுவந்த மருத்துவமனை தற்போது கரோனா சிறப்பு முகமாக செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகே நேற்று மாலை குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தை கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியால் சுற்றி வீசப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. அந்த குழந்தையை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் அதை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை கேட்பாரற்று வீசி சென்ற சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.