Skip to main content

தனித்துவிடப்பட்ட கிராமம் ; கண்டுகொள்ளாத அரசு

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
தனித்துவிடப்பட்ட கிராமம் ; கண்டுகொள்ளாத அரசு



எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசாங்கத்தினால் கைவிடபட்ட கிராமமாக இருக்கிறது செங்கமேடு கிராமம்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமம் தான் செங்கமேடு. சுற்றிலும் 3 கிலோமீட்டருக்கு வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அந்த சின்ன கிராமத்தில் பூர்வீக குடிகளாக 25 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு பிரதான தொழிலே விவசாயம் மட்டுமே. ’’இதுவரை அரசாங்கத்தின் கார்களோ, அதிகாரிகளின் பாதங்களோ அந்த கிராமத்தில் பட்டதில்லை’’ என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

குளத்து நீரே குடிநீர் ;

கிராமத்தின் அடிப்படை தேவைகளான சாலைகளோ, தெருவிளக்கோ, இருப்பிட வசதிகளோ, இதுவரை அந்த கிராமத்து மக்களுக்கு முறையாக கிடைக்கவில்லை. அந்த கிராமத்தின் எல்லையில் உள்ள குளத்தின் நீரையே பல நேரங்களில் குடிநீராக பயன்படுத்தும் அவலம் இருக்கிறது. 3 கிலோமீட்டருக்கு தெருவிளக்குகளே இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட தொகுப்பு வீடுகளும், அந்த மக்களை விட கவலைக்கிடமாக காட்சியளிக்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை வேலையை இழந்து சென்று மனுகொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் அந்த கிராமத்து பெண்கள்.



கிராமத்தின் முதியவர் நமச்சிவாயம் கூறுகையில், ‘’ சாதாரன மின் தடை ஏற்பட்டாலே மாதக்கணக்கில் மன்றாடினால் தான் சரி செய்வாங்க. வயக்காட்டு பகுதிகளில் குழந்தைங்கள வச்சிக்கிட்டு அவதிபடுறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்டு வருவாங்க, மத்தபடி எதுக்கும் யாரும் இங்க வந்ததில்லங்க. இங்க இருந்து 3 கிலோமீட்டர் சேறும் சகதியுமான சாலையில தான் நடந்தே ரேசன் கடைக்கு போகனும். 3 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள திருவிடைக்கழி பள்ளிக்கூடத்திற்கு 28 பிள்ளைங்க வயக்காட்டு வழியாக நடந்து போகுதுங்க. மழை காலத்தில பள்ளிக்கூடமே போகாதுங்க, போகவும் முடியாது. 

ஊரு பூறா டெங்கு, சிக்கன் குனியா காய்ச்சல்னு விழிப்புனர்வு பிரச்சாரம் அரசாங்கம் செய்யுறாங்க. இதுவரைக்கும் எங்க கிராமத்திற்கு யாரும் வந்ததில்ல. வயல்காட்டில் உள்ள பாம்பு போன்ற விஷசந்துக்கள் கடித்தாலோ, கர்ப்பினி பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ, அவசரத்திற்கு 108 கூட வராது, அது வரும் அளவில் சாலைகள் வசதியில்ல. எங்க கிராமத்திற்கு எப்போது விடிவு வருமோ கண்கலங்கியபடி சொன்னார்.

 இந்த கிராமம் இன்னும் இதே நிலைக்கு இருக்க காரனம் அந்த கிராமத்திற்கு அப்பால் உள்ள பெரு முதலாளிகளும் செங்கள் சூலை நடத்துபவர்களும் தான் என்கிறார் அந்த கிராமத்து இளைஞர் ஒருவர். 



அவர் மேலும் கூறுகையில், ‘’ செங்கள் சூலை ஓனர்களுக்கு எங்கள் கிராமத்தை சுற்றிலும் நிலங்கள் அதிகம், அவர்களின் செங்கள் சூளைக்கு வாகனங்கள் போக ஏதுவாக சாலைகளை மாற்றிக்கொண்டனர். அரசாங்கம் சாலைகள் போட்டால் இவர்களின் கனரக வாகனங்கள் அடிக்கடி போய் சேதப்படுத்திவைடும் அதனாலேயே அந்த கிராமத்திற்கு சாலை வந்தால் இடையூறு செய்துவிடுகிறார்கள்.’’என்கிறார் அவர்.

செங்கமேட்டு கிராம மக்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கும் செங்கள் சூலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த கிராமத்தின் சாலைகளை உடனே மீட்டு சரி செய்யவேண்டும். நல்ல வீடுகள் கட்டி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளோடு சமுக ஆர்வலர் அருள்தாள் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். ஏழைகளுக்காக உழைத்த எம்,ஜி,ஆரின் பெயரின் நூற்றாண்டு விழா எடுக்கும் எடப்பாடி அரசுக்கு ஏன் மனம் வரவில்லை.

க.செல்வகுமார். 

சார்ந்த செய்திகள்