அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை ஓபிஎஸ், இபிஎஸ், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தனர்.

அப்போது பேசிய ஓபிஎஸ், ’’அதிமுக - தேமுதிக கூட்டணி என்பது உணர்வுப்பூர்வமானது. இந்த கூட்டணி கெட்டியான கூட்டணி. வேட்புமனு தாக்கலுக்கு முன் தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவு செய்யப்படும்’’என்று கூறினார்.

அதன்பின்னர் பேசிய பிரேமலதா, ’’அதிமுக - தேமுதிக கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணி. சட்டப்பேரவை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்கு நான் விளக்கம் கொடுத்துவிட்டேன்.

தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எண்களில் ஒன்றும் கிடையாது. எண்ணங்களில்தான் எல்லாம் இருக்கிறது. இந்த கூட்டணி அமையாமல் இருக்க சிலர் சதி வேலைகளில் ஈடுபட்டனர். பரவாயில்லை, நாரதர் கலகம் நல்லதில் முடிந்தது. கெடுவார்கள்தான் கேடு நினைப்பார்கள்.