Skip to main content

நீட் விலக்கு... ஆளுநரை சந்திக்கும் தமிழ்நாடு முதல்வர்! 

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

Neet exemption ... Chief Minister of Tamil Nadu to meet the Governor!

 

தமிழ்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளான செப். 13ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவைச் சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். அதேபோல் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, கடந்த ஜூலை 14ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.

udanpirape

அந்த அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்து செய்ய தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் தேர்வை ரத்து செய்ய தனிச் சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ சேர்க்கையில் சமூகநீதி உறுதி செய்யப்படும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், நீட் விலக்கு தொடர்பாக இன்று (13.10.2021) முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க இருக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இந்தச் சந்திப்பு நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்