Published on 01/08/2018 | Edited on 02/08/2018

கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க நேற்று இரவு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். பிறகு ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார் விஜய் ஆண்டனி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, "இத்தனை வருடங்களாக ஒரு கட்சியை நிலைநிறுத்தி, ஆட்சியை அமைத்து தமிழகத்தை வளர்த்தவர் கலைஞர். அவரது அறிவு மிகப்பெரியது. அந்த வரலாறு அவ்வளவு சீக்கிரமாக நம்மை விட்டுப் போகாது. நான் விசாரித்த வரை கலைஞர் அய்யா நன்றாக உடல்நலம் தேறி வருகிறார். சீக்கிரமே அவர் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார். நன்றி" என்று கூறினார்.