Published on 14/06/2018 | Edited on 14/06/2018

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக்ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இன்று மதியம் விசாரணை செய்தது. விசாரணையில் துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும், வேறுகுழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறும் உத்தரவிட்டனர்.