![l](http://image.nakkheeran.in/cdn/farfuture/j5jegE94sEE_Z53ZW62KTh6Dfmj0XgsIdP9fPYnjRmY/1634058987/sites/default/files/inline-images/10_54.jpg)
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82. பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட முக்கிய தமிழ் திரைப்படங்களில் அவர் நடத்துள்ளார். 1965-ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமான அவர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, " என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் முதல் படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். 1972ம் ஆண்டு வெளிவந்த "அவள்" திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/SYR0OMiByDXr7YsORW59SeFe9Y__Ss9MefkoI-sf3GQ/1634059017/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_9.jpg)