Skip to main content

வேங்கை வயல் விவகாரம்: டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேர்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

vengai vayal issue; 8 people refused DNA test

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

 

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலீஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் இந்தக் குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

 

இந்நிலையில் நீதிமன்ற அனுமதிக்கு பிறகு வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 11 பேரின் மாதிரிகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.  டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருந்த 11 பேரில் எட்டு பேர் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு சம்மன்  அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் 119 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்