Published on 22/02/2020 | Edited on 22/02/2020
சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த வீரப்பன் - முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி மற்றும் வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். எம்.ஏ ஆங்கிலம் படித்து வரும் விஜயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவனுடன் கொடியை பிடித்தபடி உள்ள புகைப்படம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வந்தது.



இதற்கிடையில் தற்போது மூத்த மகள் வித்யாராணி கிருஷ்ணகிரியில் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருப்பது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.