Published on 31/01/2020 | Edited on 31/01/2020
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள நிலஅளவை பிரிவு சார்பு ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியில் இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் சோதனை நடைபெற்றுள்ளது.