



Published on 14/05/2020 | Edited on 14/05/2020
கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற மத்திய அரசுக்குத் தொழில்துறை கூட்டமைப்பு பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதை எதிர்த்து சென்னையில் பஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடபழனி, அம்பத்தூர், பல்லவன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.