



Published on 24/11/2021 | Edited on 24/11/2021
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (23.11.2021) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை (மே) மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை உள்ளிட அமைப்பினர் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிகழ்வில், திரிபுராவில் இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.