![Vck parties carry black flag to demand Modi's resignation](http://image.nakkheeran.in/cdn/farfuture/1NRq2b98nlAMlT0G7ND7TsLdVLQiI2VTUn12Uz2dtAM/1622023350/sites/default/files/inline-images/vck-struggel.jpg)
மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது. பதவியேற்ற நாளை கருப்பு தினமாக அனுசரித்து இந்தியா முழுவதும் விவசாயிகள் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. அதன்படி அகில இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் தில்லை நகர், காந்திபுரம் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ‘கார்ப்பரேட் கைக்கூலி மோடியே பதவி விலகு’, ‘மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் தர வேண்டும்’ என வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடியோ சிஸ்டர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ரஞ்சித் ரகு, விடுதலை சரவணன், விஜய், செல்வம், அன்பு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ராஜா, செந்தில், சிவா, தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் ரமணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.