Skip to main content

ஒரு கையில் அரசியலமைப்பு, மறுகையில் மத நூல்கள்..! வண்ணாரப்பேட்டையில் தொடரும் நூதன போராட்டம்.(படங்கள்)

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

 

குடியுாிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக் கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதைக் கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.  அன்றுமுதல் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. 
 

ஷாஹின் பாக் தொடர் போராட்டத்தின் 26 வது நாளான (10/03/20)  நேற்று முன் தினம் வாயில் கறுப்பு நிற டேப் ஒட்டிக்கொண்டும் 26 வது நாளான நேற்று (11.03.2020) CAA,NRC,NPR க்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றாமல், இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, மத்திய அரசின் சட்டத்தினை மாநில அரசின்  தீர்மானம் கட்டுப்படுத்தாது எனக்கூறிய தமிழக அரசை கண்டித்து ஒரு கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையையும் மறு கையில் அவர் அவர்களின் புனித நூல்களையும் (திரு குரான்,பகவத் கீதை,பைபிள்) ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்