Skip to main content

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு;செல்லும்? செல்லாது?;ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்ப்பு விவரம்!!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

 

18 mla

 

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வின் உத்தரவு பகுதி

 

தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி....

தகுதிநிக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என கூறமுடியாது. சபாநாயகர் உத்தரவை பிறப்பிக்கும் முன்னர் ஆட்சியை களைப்பார்களா, மாட்டார்களா என இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அதனடிப்படையில் தகுதிநிக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

 

இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை எடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்தால் முடியாது. அது நீதிமன்ற பணியும் இல்லை. அவருக்கு கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளார்.

 

உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவுகளில் சபாநாயகர் அதிகாரங்களில் குறைந்த அளவிற்கே தலையிட முடியும். முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

 

சபாநாயகர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரன்பாடு இருந்தாலும் தலையிட முடியும். சபாநாயகரின் உரிமையை மீறி முடிவு எடுத்தாலோ, சட்டம் மீறபட்டிருந்தாலோ, இயற்கை நியதி மீறபட்டிருந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் சபாநாயகரால் இவை மீறப்பட்டதாக தெரியவில்லை.

 

தனிப்பட்ட விரோதம் காரணமாக சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. அதனால் 18 எம்எல்ஏ-களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏற்கனவே தகுதி நீக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர்கள் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க கூறுவது தவறு.

 

கட்சியில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் அதுமாதிரியான நடவடிக்கைகள் கூட கட்சித்தாவல் தான் என்று கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதனடிப்படையில் சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சபாநாயகர் உத்தரவில் இயற்கை நீதி எவ்விடத்திலும் மீறப்படவில்லை.

 

அதனடிப்படையில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவர் உத்தரவு செல்லும், உத்தரவை எதிர்த்த 18 பேரின் மனுக்கள் தள்ளுபடி.

 

 

நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு...

 

சபாநாயகரின் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. தகுதிநீக்க உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது.

 

எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சிதாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார்.

 

அரசியலமைப்பு சட்டம் 10-வது அட்டவணைப்படி, சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைக்க கொடுக்கவில்லை. இந்த காரணங்களுக்காக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது.

சார்ந்த செய்திகள்