கோவையில் காந்திபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவகத்தில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மேற்கு தமிழகத்தின் குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம் போன்ற சிறுகுறு தொழிலாளர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை ஏற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி சீர்திருத்தம், வரி குறைப்பு அதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்துள்ளார்.
அதன்பின்னர் நம்முடைய பங்குச்சந்தை உற்சாகமான உயரத்தை தொட்டுள்ளது. மேலும் புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியா எவ்வாறாக இருந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக இந்தியாவை முன்கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்துவருது தற்போதைய வரி சீர்த்திருத்தம் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் அண்மையில் 5 தொழில் அமைப்புகளை நிதி அமைச்சர் நேரில் சந்தித்துள்ளார், அப்போது நானும் உடன் இருந்தேன் மோட்டர், டெக்ஸ்டைல், சர்க்கரை , சிவில் மற்றும் தங்கம் சங்கள் நிதி அமைச்சரை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு தொழில் சம்பந்தப்பட்ட வரி விலக்குகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெட் கிரைண்டர் உற்பத்தி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழில் துறையினரை சந்தித்து குறைகளை கேட்டும் வருகிறார் நிதி அமைச்சர்.
வெட் க்ரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி 12% குறைந்துள்ளது. மேலும் வங்கி கடன் வழங்குவதை குறித்து மத்தியமைச்சர் சாமியான அமைத்து மக்களுக்கு தொழில் தொடங்க, மோட்டர் வாகனம் வாங்க தேவையான கடன் உதவியை அளிக்க வேண்டும் என புதிய வழிவகை மக்களுக்கு காண்பித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் மாபெரும் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக அமைந்துள்ளது. மேலும் இரயில்வே துறையில் தமிழர்கள் தாண்டி வட மாநிலத்தவர்கள் அதிகம் தேர்வாகியுள்ளது குறித்து ஊடகங்களில் பார்த்தேன். இதுகுறித்தான கருத்தை நாம் ஆழமாக பார்க்க வேண்டும் எவ்வளவு பணியிடங்கள்?? எவ்வளவு பேர் தேர்வு எழுதியுள்ளார்கள், அதில் எவ்வளவு பேர் தமிழர்கள் என பல கேள்விகள் உள்ளது. முழுமையாக தெரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பதாக கூறினார்.