Published on 25/02/2019 | Edited on 25/02/2019

நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டபோது தர்ணாவில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காலை ஆஜரானார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியரை போலீஸார் கடந்த 09.10.2018 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அப்போது நக்கீரன் ஆசிரியரை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டார் வைகோ.

இதுதொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தொடர்ந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததால் வைகோ நேரில் ஆஜரானார்.