சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் வலைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், குஜராத் குருசேத்திரப் பல்கலைக்கழகம், கேரளா மாநிலம் கோழிகோடு பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், அப்துல்கலாம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 65 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டனர்.
![universities basket ball annamalai university champion](http://image.nakkheeran.in/cdn/farfuture/2VFv6VihN2cEPH_f6TQBbayRBN-XSOpZMdIqKOSw7YU/1581907203/sites/default/files/inline-images/sports444.jpg)
கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் அனைத்து பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டிகள் காலிறுதி அரையிறுதி என பல்வேறு வகையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி - குருஷேத்ரா பல்கலைக்கழக அணியை (23-13) என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தில் வெற்றி பெற்றது.
![universities basket ball annamalai university champion](http://image.nakkheeran.in/cdn/farfuture/niBNNFXjlwRwqDttFJsVPpn9u3YCj7tmsuoAI7iZrY4/1581907216/sites/default/files/inline-images/sports55555.jpg)
புள்ளிகள் அடிப்படையில் காலிகட் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தையும், குருஷேத்ரா பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும், மங்களூர் பல்கலைக்கழக அணி நான்காம் இடத்தையும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மனித உரிமை பாதுகாப்பு துறை இயக்குனர் விக்ரமன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குனர் செல்வம் பயிற்சியாளர் சின்னையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.