Skip to main content

பேருந்து கவிழ்ந்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு!

Published on 06/02/2025 | Edited on 06/02/2025

 

Bus Overturned incident 2 people lost his life

திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லக் கூடிய தனியார் பேருந்து இன்று (06.02.2025) காலை 08.30 மணியளவில் விஜயமங்கலம் - செங்கப்பள்ளி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில்  சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அச்சமயத்தில் ஒரு கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற போது நிலைதடுமாறி பேருந்து கவிந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுக்கிறது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவர் பெரியசாமி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக கூறப்படுகிறது. இருவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டனர். அவர்களை ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்