Skip to main content

கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுவிப்பு... 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

fg

 

உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவும், சங்கரும் 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். 2016 மார்ச் 13-இல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.   

 

கௌசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், மூன்று பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று காலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுவித்துள்ளது. மற்ற ஐந்து பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் நீதிமன்றம் குறைத்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்