


Published on 29/03/2025 | Edited on 29/03/2025
'100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் மார்ச் 29ஆம் தேதி ( 29.3.2025 - சனிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பல இடங்களில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 850 கழக ஒன்றியங்களில் 1,170 இடங்களில் 100 நாள் வேலைக்கு செல்வோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.