Skip to main content

கண் கலங்கிய உதயநிதி ஸ்டாலின்!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

திண்டுக்கல் மாவட்டத்தில்  வத்தலக்குண்டில் திமுக வேட்பாளர்கள் வேலுச்சாமி சௌந்தரபாண்டியன் ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வைத்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் வரவேற்றார். கூட்டத்தில் முரசொலி நிர்வாக இயக்குனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றிய போது...  

 

dmk

 

கருணாநிதி மரணம் தொடர்பான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதில் அளித்து பேசும்போது.. கண்கலங்கினார். திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து சிகிச்சையும் வெளிப்படையாக நடைபெற்றது. மரணப்படுக்கையில் இருந்தபோது எழுந்து வா தலைவா என தமிழக மக்கள் அவரை அழைத்த போதும் மரணம் அவரை தழுவியது. அவர் இறுதியில் ஆசைப்பட்டது போல் அண்ணா சமாதி அருகே அவர் உடல் அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டபோது எடப்பாடி பழனிச்சாமி அரசு இடம் தர முன்வரவில்லை. தலைவர் கலைஞர் இறந்துவிட்டார் என்பதை நினைத்து அழுவதா அல்லது அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போக போகிறோம் என்று அழுவதா இன்று தமிழகமே கண்ணீர் சிந்திய வேளையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இடம் ஒதுக்க உத்தரவிட்டது.

 

dmk

 

கலைஞர் மறைந்தும் போராடி வென்றார் என்று உருக்கமாக  பேசினார். கலைஞர் மரணம் தொடர்பான விவரங்களை பேசும்போது உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார். அப்போதுமேடையில் இருந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ பெரியசாமி எம்எல்ஏக்கள் செந்தில்குமார் சக்கரபாணி ஆகியோர் முகத்தை மூடி அழுதனர் இதனால் கூட்டத்தில் பெரும் அமைதி நிலவியது.

 

 

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் கணேசன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்