Skip to main content

“நான் உங்க வீட்டு பிள்ளை..” - மீனவ மக்களிடம் நெகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

udhayanidhi stalin talk about fisherman

 

திமுக இளைஞா் அணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 21 ஆம் தேதி கன்னியாகுமரியில் 'இல்லம் தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். பின்னர் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைபதிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாலையில் முட்டம் கடற்கரையில் நடந்த உலக மீனவர் தின வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். 

 

மீனவர் தின விழாவில் கலந்து கொள்ள சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் மீனவர்கள் செண்டை மேளம் கொட்டி, கொடி தோரணத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். உலக மீனவர் தின வெள்ளி விழாவை அரசு விழாவாக நடத்த தமிழக மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அனுமதி அளித்ததை அடுத்து, இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் மற்றும் துறை இயக்குனர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், எஸ்.பி.ஹாிகிரன் பிரசாந்த் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

 

தொடர்ந்து விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “குமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராம மக்கள் இணைந்து நடத்தும் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு உள்நாட்டு மீனவா்களோடு கடற்கரை மீனவா்களும் சோ்ந்து 5 லட்சம் பேர் வாழ்கிறீா்கள். உங்களை கடலோர அமைதி மற்றும் வளா்ச்சிக்குழு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்துவது பெருமையாக உள்ளது.

 

udhayanidhi stalin talk about fisherman

 

என்னிடம் நீங்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். அதுபோல் மேலும் பலர் என்னிடம் பல கோரிக்கைகளை மனுக்களாக தந்துள்ளனர். நான் இங்கு வரும்போது நீங்கள் என்னிடம் உங்கள் கோரிக்கைகளை தருவீர்கள் என்று தெரியும். அதனால்தான் துறை மந்திா்ியையும், துறை இயக்குனரையும் கையோடு அழைத்து வந்துள்ளேன். இங்கு என்னை பற்றி பேசிய பலர் நான் எம்.எல்.ஏ.யாக, இளைஞரணி செயலாளராக, சின்னவராக, கதாநாயகனாக வந்திருக்கிறேன் எனக் கூறினாா்கள். அதையெல்லாம் விட நான் பெருமையாக சொல்லுகிறேன், உங்க வீட்டு பிள்ளையாக வந்திருக்கிறேன் என்று. இதற்கு காரணம் என்னுடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பாதி இடமே மீனவர்கள் தான் வசிக்கிறார்கள். எம்.எல்.ஏ. அலுவலகமே அங்குதான் உள்ளது. கை-ரிக்ஷாவை ஒழித்துக் கட்டிய கலைஞர் அரசு தான் மீன்பிடி படகுகளுக்கு இயந்திரம் பொருத்தி விசைப்படகுகள் தந்தது. மேலும் மீனவர் நலவாரியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், டீசலுக்கு மானியம் தந்தது எல்லாமே கலைஞர் தான்.

 

தற்போது மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரமாக உயர்த்தி இருப்பது முதல்வர் தலைமையிலான அரசு. விரைவில் அது 8 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். அதேபோல்  நீங்கள் தந்திருக்கும் கோாிக்கைகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக முதல்வரிடம் பேசி அதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்” என்றாா். விழாவில் ஆயிரக்கணக்கான மீனவா்களும் மீனவப் பெண்களும் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்