Published on 01/10/2022 | Edited on 01/10/2022
சென்னையில் இரண்டு வயது குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்த புகாரில் குழந்தையின் தாயினை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சாஸ்திரி நகரில் வசித்து வந்த பானு விமல் ராஜ் தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்தது. சில தினங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில் பானு ஜெகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுடன் இருந்த குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பானுவின் தாயார் குழந்தையை சென்று பார்த்த போது குழந்தைக்கு முகத்தில் சிராய்ப்பும் சிகரெட்டினால் சூடு வைத்த காயங்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்து இரண்டு வயது குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்த புகாரில் குழந்தையின் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.