Skip to main content

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள்; விசாரணையில் அதிர்ச்சி!

Published on 12/09/2024 | Edited on 12/09/2024
Two teachers arrested under POCSO Act misbehaving with Nellai students

திருநெல்வேலி மாவட்டம் பளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், தற்காலிக ஆசிரியராக ராபர்ட் என்பவரும், நிரந்தர ஆசிரியராக நெல்சன் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த இரண்டு ஆசிரியரும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூற, ஆத்திரமடைந்த அவர்கள் தலைமையாசிரியருக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் உடனடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை மேற்கொண்டார். அதில் இரண்டு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தற்காலிக ஆசிரியர் ராபர்ட்டை பணிநீக்கம் செய்தும், நிரந்தர ஆசிரியர் நெல்சனை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண நிலையில் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்