தமிழக அரசின் ஸ்டிக்கரை ஒட்டி நூதனமுறையில் கடத்தப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5760 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் இடுபட்ட இரண்டு பேரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர் நாகை தனிபிரிவு போலீசார் .
நாகை அருகே உள்ள தமிழக எல்லையான வாஞ்சூரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையிலான தனிபிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த மீன் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வண்டியில் பால்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மீன்வண்டியில் பால்பெட்டி எதற்கு என சந்தேகமடைந்த காக்கிகள், பெட்டிகளை திறக்க சொன்னார்கள் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் திடீரென்று மின்னல் வேகத்தில் வாகனத்தை வேகமாக முறுக்கி தப்பி சென்றார். அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அருகில் உள்ள நாகூர் ரவுண்டானாவில் இருந்த போலீஸார் அந்த வாகனத்தை துரத்தி சென்று கிழக்கு கடற்கரை சாலையில் மடக்கி பிடித்தனர்.
அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஓட்டுநரையும் கூடவந்த மற்றொரு நபரையும் பிடித்துக்கொண்டு, வண்டியை திறந்துபார்த்து அதிரந்தனர். அந்த வண்டியில் பால் ஏற்றுவதுபோல சரக்கு பெட்டிகளை மறைத்து வைத்து மதுபாட்டிகளை கடத்தி வந்துள்ளனர். 120 பெட்டிகளில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5760 புதுச்சேரி மாநில மதுபாட்டிகள் இருந்ததை கைப்பற்றினர். அதோடு அந்த மதுபாட்டில்களில் தமிழக அரசின் டாஸ்மாக் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைக்கண்டு அதிர்சியடைந்தனர்.
பின்னர் சரக்கு கடத்திவந்த வாகனத்தையும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் கல்லறைப்பேட்டை பகுதியை சேர்ந்த பழனிராஜா, பூவம் பகுதியை சேர்ந்த எட்வர்ட்ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனையில் ஈடுபட்டனர்.
அதில்" . மதுபாட்டில்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு கடத்தி செல்லவதாகவும். கடத்தப்பட்ட மதுபாட்டிகளில் தமிழக டாஸ்மாக்கடை சரக்குகளில் உள்ள அதே ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர், அந்த பாட்டில்கள் உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருந்ததவையா? அல்லது அங்குள்ள அதிகாரிகளின் துணையோடு வெளியில் விற்பனை செய்வதற்காக ஸ்டிக்கர்களை வாங்கிச்சென்று ஒட்டி கடத்தியுள்ளனரா என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.