சிவகாசி – காக்கிவாடன்பட்டியில் ராஜு என்பவர் நடத்திவரும் கிருஷ்ணசாமி பயர் ஒர்க்ஸில், இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இறந்தவர்களை சாக்குமூட்டையில் அள்ளினார்கள். மாரியப்பன், கிருஷ்ணன், பொன்னுச்சாமி ஆகிய மூவர் இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடல்களை எடுத்துவந்த பிறகுதான், இருவர் மட்டுமே இறந்ததும், பொன்னுச்சாமி 100 சதவீத காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதும் தெரிய வந்தது. பாண்டி என்பவரும் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பாண்டி இறந்துவிட்டார். பொன்னுச்சாமியின் உயிர் ஊசாலடுகிறது.
கடந்த ஆண்டும் இதே பட்டாசு ஆலையில் விதிமீறல் நடந்து வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வேறென்ன சொல்வது? வழக்கமாக நடக்கும் பட்டாசு விபத்துதான். உயிரிழப்புதான். வெடிவிபத்தில் இறந்தால், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகை நிவாரணமாகக் கிடைத்துவிடும்.
வெடிவிபத்தில் விழும் பிணங்களுக்குத் தலைக்கு ஒரு விலை வைத்திருக்கின்றனர். பட்டாசுத் தொழிலாளர்களின் உயிரை யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை. கொடுமைதான்!