![modi](http://image.nakkheeran.in/cdn/farfuture/3hnx2s6qm0_h6nEoCHytZEnLy5TOVnRnVE2KzfW-Z-Y/1658927211/sites/default/files/inline-images/n144.jpg)
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகளை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதன்காரணமாக ஜூலை 28, 29 ஆகிய தினங்களில் பிரதமர் பயணிக்கும் இடங்களில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டுநாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மட்டுமல்லாது, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். மேலும் தமிழக பாஜக நிர்வாகிகளை பிரதமர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.