தூத்துக்குடியில் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் கிராமத்தில் வெங்கடேஷ பண்ணையாரின் 14-வது நினைவு தினம் வருகின்ற 26-ம் தேதி கடைபிடிக்கப்படுவதை குறிப்பிட்டுள்ளார். இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வருகின்ற 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கூறியுள்ளார். மேலும், பொது இடங்களில், ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.